/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16,743 மனுக்கள் பெறப்பட்டுள்ளன'
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16,743 மனுக்கள் பெறப்பட்டுள்ளன'
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16,743 மனுக்கள் பெறப்பட்டுள்ளன'
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16,743 மனுக்கள் பெறப்பட்டுள்ளன'
ADDED : ஜூலை 25, 2025 01:15 AM
கரூர், ''கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை, 16,743 மனுக்கள் பெறப்பட்டுள்ளது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதுாரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி முகாமை தொடங்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், 179 இடங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. தற்போது வரை, 23 முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை, 16,743 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 6,577 மனுக்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களாக வந்துள்ளன.
தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர் என்று, எதிர்க்கட்சிகள் குறை சொல்லும் வகையில் பேசி வருகின்றனர். எங்களை குறை கூறும் அரசியல் கட்சியினர், அவர்கள் எப்படி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர் என்பதை பார்க்க சொல்லுங்கள். அந்த கட்சியினர் மேடை போட்டு, பந்தல் போட்டு வரச் சொல்லியா உறுப்பினர் சேர்க்கின்றனர். ஏதாவது குறை கூற வேண்டுமே என்று சொல்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.