/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.70 லட்சம் பறிமுதல்
/
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.70 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.70 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.70 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 20, 2024 07:15 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, தோகைமலை மணப்பாறை நெடுஞ்சாலையில், சின்னரெட்டிப்பட்டி சோதனை சாவடியில் நேற்று காலை, 11:30 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மல்லிகா தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தோகைமலையிலிருந்து திருச்சி ராம்ஜி நகர் நோக்கி சென்ற, பொலிரோ காரில் கவுண்டம்பட்டியை சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ், 25, உரிய ஆவணம் இல்லாமல் ஒரு லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றார். அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பின், பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து, 70 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் குளித்தலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர். நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், தாசில்தார் சுரேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார்கள் வைரபெருமாள், மருதை, ஆர்.ஐ., ஸ்ரீவித்யா ஆகியோர் உடன் இருந்தனர்.