sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிளஸ் 2 பொது தேர்வு தொடக்கம் 175 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

/

பிளஸ் 2 பொது தேர்வு தொடக்கம் 175 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

பிளஸ் 2 பொது தேர்வு தொடக்கம் 175 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

பிளஸ் 2 பொது தேர்வு தொடக்கம் 175 மாணவர்கள் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 03, 2026 04:18 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 175 மாணவ, மாணவியர் தேர்வெழுத வரவில்லை.

கரூர், புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, கலெக்டர் ரவிகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 26 வரை, 47 தேர்வு மையங்களில் நடக்கிறது. இதில், தமிழ் பாடத் தேர்வை 117 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 4,695 மாண-வர்களும், 5,483 மாணவியர், 173 தனித்தேர்வர்கள் என மொத்தம் 10,351 பேர் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், 10,174 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 2 பேர் தமிழ் தேர்வு எழுத விலக்கு பெற்றவர்கள் தவிர, 99 மாண-வர்கள், 59 மாணவியர், தனித்தேர்வர்கள், 17 பேர் என மொத்தம், 175 பேர் தேர்வெழுத வரவில்லை. மேலும், பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக, 47 தலைமை ஆசிரியர்களும், 47 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பா-ளர்களாக பணியாற்ற, 630 ஆசிரியர்களும், பறக்கும்படை அலு-வலர்களாக, 110 ஆசிரியர்களும் நியமக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை மற்றும் தீய-ணைப்புத்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு, தடையில்லா மின்-சாரம் மற்றும் தேர்வெழுத மையங்களுக்கு வந்து செல்ல போதிய அளவில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜூ உள்-பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us