/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 179 சிறப்பு முகாம்: கலெக்டர்

ADDED : ஜூலை 12, 2025 01:18 AM
கரூர் :கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 179 சிறப்பு முகாம்கள் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாநகராட்சி சோழன் நகரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணியை, கலெக்டர் தங்கவேல் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் வரும், 15 முதல் செப்., 15 வரை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 179 சிறப்பு முகாம் நடக்கிறது. அதற்காக, 420 தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கப்பட்டு வருகிறது.
ஊரக பகுதிகளில், 101 முகாம்களும், நகர்ப் புற பகுதிகளில், 78 முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த முகாம் சார்பில் நகர்ப்புற பகுதியில், 13 அரசு துறைகள் மூலம், 43 சேவைகளும், ஊரக பகுதியில், 15 அரசு துறைகள் மூலம், 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும், மருத்துவ முகாம், ஆதார் சேவை மையங்கள், இ-சேவை மையங்களும் அமைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பகுதியில், நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி மேயர் கவிதா, தாசில்தார்கள் குமரேசன், மோகன்ராஜ் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.