தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்


ADDED : அக் 10, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூரில் வரும் 19ல் தனியார்

வேலை வாய்ப்பு முகாம்

கரூர், அக். 10--

தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும், 19ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும், 19ல் நடக்கிறது. முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி. துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தங்களது சுயவிபரம் மற்றும் கல்வி சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு, பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலை நாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 9345261136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் வேலையளிப்போர், 9499055912, 9360557145 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us