ADDED : மே 20, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி :கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரத்தில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சின்னதாராபுரம் போலீசார், ஐந்து ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த அன்பழகன், 58, என்பவர் சட்ட விரோதமாக மது விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ஆறு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், புரவிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற சண்முகம், 58, என்பவரை கைது செய்து, ஆறு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருவரிடமிருந்து, 2,000 ரூபாய் மதிப்புள்ள, 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
