/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் 2 மணி நேரம் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
/
குளித்தலையில் 2 மணி நேரம் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
குளித்தலையில் 2 மணி நேரம் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
குளித்தலையில் 2 மணி நேரம் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 08, 2025 01:42 AM
குளித்தலை, குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் கனமழையும் மற்றும் மிதமான சாரல் மழையும் பெய்தது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, மணவாசி, மாயனுார், வீரராக்கியம், திம்மாச்சிபுரம், அய்யர்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
நங்கவரம், நெய்தலுார், ராஜேந்திரம், தண்ணீர் பள்ளி, மருதுார், தோகைமலை ஆகிய பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து, 100 டிகிரிக்கு மேல் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், மழை காரணமாக பூமி குளிர்ச்சி அடைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாய்ந்தது தகர பந்தல்
நேற்று இரவு பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றால், கடையின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த தகர பந்தல் பெயர்ந்து கீழே சாய்ந்தது. பந்தல் கீழே விழுந்து இருந்தால் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும், ஆபத்தான வணிக வளாகங்களை ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூறாவளி காற்றால் துாக்கி வீசப்பட்ட, கடையின் தகரத்தை அகற்றும் பணியால் பொதுமக்கள் கடைவீதி பகுதியில் செல்லாதவாறு, பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மின் வாரிய ஊழியர்கள் மின் ஒயர்களை துண்டிப்பு செய்தனர்.

