ADDED : அக் 27, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை நகராட்சி, மணத்தட்டை கடைவீதியை சேர்ந்தவர் ஆனந்தன், 59; இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டின் முன், இரண்டு வெள்ளாடு கிடா குட்-டிகளை கட்டி வைத்திருந்தார்.
நள்ளிரவில் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், 2 பேர், ஆடுகளை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள், குளித்-தலை போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து, ஆனந்தன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணையில், மணத்தட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த பகத்சிங், 25 மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய-வந்தது. இருவரையும் கைது செய்தனர்.