ADDED : ஆக 02, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் வாலியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல், 55; விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி, 40. வாலியாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி முத்துலட்சுமி, 55. நேற்று காலை, மொபட்டை பூங்கொடி ஓட்ட, அவருக்கு பின்னால் முத்துலட்சுமி அமர்ந்து வந்தார்.
தரகம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே மொபட்டில் சென்றபோது, திருச்சியில் இருந்து தரகம்பட்டி நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி பலியானார்.
பூங்கொடி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.