ADDED : நவ 29, 2026 07:21 AM
அ நிறம் | அளவு
'குளித்தலை:குளித்தலை
அடுத்த திம்மம்பட்டி பஞ்., முதலிக்கவுண்டனுார் கிராமத்தை
சேர்ந்தவர் வடிவேலு, 37; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு,
7:30 மணிக்கு, தன் வீட்டில் இருந்தபோது அதே ஊரை சேர்ந்த ராஜேஸ்வரன்,
22, பிரபு, 24, ஆகிய இருவரும், வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த வடிவேல், 'ஏன் கதவை தட்டுகிறீர்கள்'
என, கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்கு வாய் தகராறு ஏற்பட்டு,
பின் கைகலப்பாக மாறியது. இதில் பாதிக்கப்பட்ட வடிவேல் கொடுத்த
புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஸ்வரன்,
பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து, குளித்தலை கிளை சிறையில்
அடைத்தனர்.
