/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி ஆற்றில் கடத்திய 20 மணல் மூட்டை பறிமுதல்
/
காவிரி ஆற்றில் கடத்திய 20 மணல் மூட்டை பறிமுதல்
ADDED : நவ 07, 2025 12:43 AM
குளித்தலை, காவிரி ஆற்றில், 20 மூட்டை மணலை கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
குளித்தலை அடுத்த சித்தலவாய் காவிரி ஆற்று பகுதியில், இரவு நேரங்களில் பைக்கில் மணல் கடத்தப்பட்டு வருவதாக வந்த புகார்படி, நேற்று முன்தினம் மாலை மாயனுார் எஸ்.ஐ., சுபாஷினி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தலவாய் ரயில்வே கேட் பகுதியில், ஸ்கூட்டி மொபட்டில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தியவர், போலீசாரை பார்த்ததும் மொபட்டை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். போலீசார் விசாரணையில், கிருஷ்ணராயபுரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன், 29, என தெரிய வந்தது. இவர் கடத்துவதற்காக வைத்திருந்த, 20 சாக்கு மணல் மூட்டை மற்றும் மொபட்டை பறிமுதல் செய்து, மாயனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

