/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய மண்டலத்தில் 209 குற்றவாளிகளுக்கு தண்டனை: திருச்சி ஐ.ஜி., அலுவலகம் தகவல்

ADDED : டிச 28, 2024 02:00 AM
கரூர்: திருச்சி மத்திய மண்டல காவல் துறையில், 209 குற்றவாளிக-ளுக்கு தண்டனை பெற்று
தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., அலுவலகம் வெளி-யிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்-டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பாண்டு, 2,472 குற்ற வழக்குகளில், 2,414 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 47 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து, 10 கோடியே, 19 லட்சத்து, 97 ஆயிரத்து, 314 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற உத்தரவு படி, பாதிக்கப்பட்டவர் க-ளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதாய கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட, 48 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், 209 குற்றவாளிகளுக்கு நடப்பு டிசம்பர் வரை நீதி-மன்றம் மூலம், தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட எஸ்.பி., களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், ரோந்து பணியில் ஈடுப-டவும், வாகன தணிக்கைகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்-ளது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.