/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சக்தி மாரியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு பால்குட ஊர்வலம்
/
சக்தி மாரியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு பால்குட ஊர்வலம்
சக்தி மாரியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு பால்குட ஊர்வலம்
சக்தி மாரியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு பால்குட ஊர்வலம்
ADDED : ஜூன் 01, 2025 01:27 AM
குளித்தலை, சக்தி மாரியம்மன் கோவி லில். 21ம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் நடந்தது.
குளித்தலை அடுத்த, வைநல்லுார் பஞ்., தெற்கு மைலாடியில் சக்தி மாரியம்மன், விநாயகர், கருப்பண்ணசாமி கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலின், 21ம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு, நேற்று விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்துடனும், சக்தி மாரியம்மன் கரகம் பாலித்தலுடனும் காட்சியளித்தனர்.
நேற்று காலை, குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் விரதமிருந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும், மேள தாளங்கள் முழங்க, 6 கி.மீ., துாரம் வரை ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. இன்று மாலை மஞ்சள் நீராட்டு விழா, கரகம் ஆற்றிற்கு செல்வதுடன் விழா நிறைவடையும்.