/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை அணைப்பாளையத்தில் 22 மி.மீ.,
/
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை அணைப்பாளையத்தில் 22 மி.மீ.,
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை அணைப்பாளையத்தில் 22 மி.மீ.,
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை அணைப்பாளையத்தில் 22 மி.மீ.,
ADDED : நவ 09, 2024 01:30 AM
கரூர், நவ. 9-
கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அணைப்பாளையத்தில், 22 மி.மீ., மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த, நான்கு நாட்களாக வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையில், அடிக்கடி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை கரூர் மாவட்டத்தில் கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,)
கரூர், 19.20, அரவக்குறிச்சி, 21, அணைப்பாளையம், 22, க.பரமத்தி, 5, தோகமலை, 14, கிருஷ்ணராயபுரம், 1, மாயனுார், 4, பஞ்சப்பட்டி, 3.60, மயிலம்பட்டி, 3 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக, 7.73 மி.மீ., மழை பெய்தது.