/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
23 நாள் குழந்தை விமானத்தில் பயணம் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்

ADDED : பிப் 16, 2024 11:45 AM
கரூர்: பிறந்த, 23 நாட்களில் குழந்தை விமானத்தில் பயணம் செய்து, இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கரூர், பெரியகுளத்துபாளையம் காயத்ரி நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நித்யா. துபாயில் மார்க்கெட் மேலாளராக கார்த்திக் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, 5 வயதில் கெவின் என்ற மகன் உள்ளார்.
கடந்தாண்டு மே மாதம் நித்யாவுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, நிலன் என்று பெயர் வைத்தனர். தவிர்க்க முடியாத காரணங்களால், இவர்கள் இந்தியா திரும்ப வேண்டி நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தை பிறந்து, 23வது நாளில் குடும்பத்துடன், விமானம் மூலம் 2023 ஜூன், 17ல் இந்தியா திரும்பினர்.
இந்நிலையில், 23 நாளில் பயணம் செய்து உலக சாதனைக்காக, இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டுக்காக கார்த்திக் விண்ணப்பம் கொடுத்தார்.
ஏற்கனவே, 45 நாள் குழந்தை விமானத்தில் பயணம் செய்தது உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடித்த இவருக்கு, இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு என்ற சாதனை புத்தகத்தில் பெயர் இடம் பெற்றுள்ளது.