/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாமக்கல் லோக்சபா தொகுதியில் முதல்முறை ஓட்டளிக்கும் இளம் வாக்காளர்கள் 23,500 பேர்
/
நாமக்கல் லோக்சபா தொகுதியில் முதல்முறை ஓட்டளிக்கும் இளம் வாக்காளர்கள் 23,500 பேர்
நாமக்கல் லோக்சபா தொகுதியில் முதல்முறை ஓட்டளிக்கும் இளம் வாக்காளர்கள் 23,500 பேர்
நாமக்கல் லோக்சபா தொகுதியில் முதல்முறை ஓட்டளிக்கும் இளம் வாக்காளர்கள் 23,500 பேர்
ADDED : ஏப் 02, 2024 04:09 AM
நாமக்கல்: ''லோக்சபா தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறை ஓட்டளிக்கும் இளம் வாக்காளர்கள், 23,500 பேர், 100 சதவீதம் ஓட்டுப்போட வேண்டும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா பேசினார்.
லோக்சபா தேர்தலையொட்டி, நாமக்கல் பாச்சல் தனியார் பொறியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாமக்கல் லோக்சபா தொகுதியில், வரும், 19ல், தேர்தல் நடக்கிறது. அன்று, மாவட்டத்தில் உள்ள வாக்களிக்க தகுதியுடைய அனைவரும், 100 சதவீதம் ஓட்டுப்போடுவதை உறுதி செய்யும் வகையில், தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில், கடந்த தேர்தல்களில், 80 சதவீதம் வரை ஓட்டுப்பதிவாகி உள்ளது. நாமக்கல் மாவட்டம், கல்வி அறிவில் மிகச்சிறப்பாக விளங்கும் மாவட்டம். அதனால், இந்தியாவிலேயே அதிக ஓட்டுப்பதிவு பெற்ற மாவட்டமாக, நாமக்கல் மாவட்டம் விளங்கிடும் வகையில் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். தேர்தல் நாளான வரும், ஏப்., 19ல், தங்களது ஓட்டு இடம் பெற்றுள்ள ஓட்டுச்சாவடிக்கு, காலை, 7:00 மணிக்கு சென்று, தவறாமல் ஓட்டுப்போட வேண்டும்.
மேலும், தங்களது உறவினர், நண்பர்களையும் ஓட்டுப்போட ஊக்குவிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறை ஓட்டுப்போட உள்ள இளம் வாக்காளர்கள், 23,500 பேர் உள்ளனர். அனைவரும் தவறாமல், 100 சதவீதம் ஓட்டுப்போட வேண்டும். அடுத்த, 5 ஆண்டுகளுக்கு, நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை, கடமை, நம் அனைவருக்கும் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கல்லுாரியில் மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, முதல்முறை ஓட்டுப்போட உள்ள மாணவ, மாணவியருக்கு, ஓட்டுப்பதிவு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு உள்பட பலர் பங்கேற்றனர்.

