/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பரிசு பொருள், பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரம் கண்காணிப்பு
/
பரிசு பொருள், பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரம் கண்காணிப்பு
பரிசு பொருள், பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரம் கண்காணிப்பு
பரிசு பொருள், பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரம் கண்காணிப்பு
ADDED : மார் 17, 2024 02:42 PM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், லோக்சபா தேர்தல் தொடர்பாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள், தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கு, 12 நிலையான கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படை, நான்கு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு, 24 மணி நேரமும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்படும் பணம் மற்றும் இதர பொருட்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.
முன்னதாக, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, நிலையான கண்காணிப்பு குழுவின் பறக்கும் படை வாகனங்களை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.

