/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
240 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கைது
/
240 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கைது
ADDED : பிப் 06, 2026 04:43 AM

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்-வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சாலைமறியல் போராட்டம் நடந்தது.
மாவட்ட
தலைவர் பத்மாதேவி தலைமை வகித்தார். குறைந்த-பட்ச ஓய்வூதியம் மாதம், 6,750
ரூபாய் வழங்க வேண்டும், அக-விலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவி-யாளர் நிலையில், 16,500
ரூபாய், அலுவலக உதவியாளர் நிலை யில், 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால
முறை ஊதியம் வழங்க வேண்டும்.
பெண் சத்துணவு ஊழியர்களுக்கு, 12 மாதம்
மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள, 60 ஆயிரம்
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்-ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று
மூன்றாவது நாளாக, சாலை மறியல் போராட்டம் நடத்-திய, சத்துணவு, அங்கன்வாடி
பணியாளர்கள் என, 240 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது
செய்தனர்.

