/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் கவிழ்ந்து விபத்து 25 பெண்கள் காயம்
/
பஸ் கவிழ்ந்து விபத்து 25 பெண்கள் காயம்
ADDED : ஜன 06, 2025 01:55 AM
புதுச்சத்திரம்: நவணி பள்ளிப்பட்டியை சேர்ந்த பெண்கள், மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பஸ் கவிழ்ந்த விபத்தில், 25 பேர் காயமடைந்தனர்.
புதுச்சத்திரம் யூனியன், நவணி பள்ளிப்பட்டியை சேர்ந்த, 56 பெண்கள், கடந்த, 3ல் தனியார் பஸ்சில், மேல்மருவத்துார் ஆதி-பராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து சென்றனர். சுவாமி தரி-சனம் முடித்து விட்டு, நேற்று முன்தினம் மாலை, சொந்த ஊரான பள்ளிப்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், இலக்கியம்பட்டி வளைவில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், 25 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

