/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வழக்குகளில் பறிமுதலான டூவீலர்கள் 27ல் ஏலம்
/
வழக்குகளில் பறிமுதலான டூவீலர்கள் 27ல் ஏலம்
ADDED : ஜூன் 20, 2025 01:34 AM
கரூர், வரும், 27ல் மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் ஏலம் விடப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட  ஆயுதப்படை மைதானத்தில் வரும், 27 காலை, 11:00 மணிக்கு  மாவட்ட மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யபட்ட, 9 இரண்டு சக்கர வாகனங்கள்  ஏலம் விடப்படுகிறது. இந்த வாகனங்களை, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும், 26 காலை 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை நேரில் பார்வையிடலாம்.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவார்கள், கரூர் எஸ்.பி.,அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள  மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில், ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்பு தொகையாக, 1,000 ரூபாய் -செலுத்தி பெயரை பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

