/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 27,406 விவசாயிகள் பயன்
/
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 27,406 விவசாயிகள் பயன்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 27,406 விவசாயிகள் பயன்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 27,406 விவசாயிகள் பயன்
ADDED : அக் 16, 2025 01:12 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், 27,406 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சப்பட்டியில், வேளாண் துறை சார்பில் வளர்ச்சி திட்டங்களை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதேயாகும். மேலும், சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த திட்டங்களுக்கான மானியங்கள் வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில், 4.5 ஆண்டுகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், 1.93 கோடி மதிப்பீட்டில், 27,406 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெற, அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.