/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் 2ம் நாளாக ஆய்வு பணி
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் 2ம் நாளாக ஆய்வு பணி
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் 2ம் நாளாக ஆய்வு பணி
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் 2ம் நாளாக ஆய்வு பணி
ADDED : செப் 20, 2024 02:31 AM
கரூர்: கரூர் தாலுகா பகுதிகளில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான நேற்று, கலெக்டர் தங்க வேல் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் நகரில், திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், மழைநீர் வடிகால் துார் வாரும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஏமூர் புதுார் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில், விவசாயிகளிடமிருந்து தினசரி பால் கொள்முதல் செய்யப்படுவதையும், விவசாயிகளிடம் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மூன்றாவது மண்டல குழு தலைவர் ராஜா, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.