ADDED : பிப் 16, 2026 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த லாலாப்பேட்டை-கள்ளப்பள்ளி செல்லும் சாலையில், தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படு-வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 8.15 மணிக்கு, லாலாப்-பேட்டை எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் போலீசார், அப்-பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சக்கரவர்த்தி, 19, குணா, 22, ஆகிய இருவரும் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவர்-களை கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், கம்மநல்லுார் காவிரி ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்ற இளையராஜா, 23, என்பவரை பிடித்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

