sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

/

கரூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது


ADDED : டிச 04, 2024 06:49 AM

Google News

ADDED : டிச 04, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், இரு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் கலையரசன், 28; பாலத்துறையில் உள்ள, பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த, 26ல் இரவு பேக்கரிக்கு வந்த, கரூரை சேர்ந்த எஸ். கலையரசன், ேஷக் தாவுத், 25; ஆகியோர், பேக்கரி ஊழியர் கலையரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2,200 ரூபாயை பறித்து சென்றனர். கலையரசன் கொடுத்த புகாரின்படி, பணம் பறித்த எஸ்.கலையரசன், ேஷக் தாவுத் ஆகிய, இரண்டு பேரை, வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

* கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம், 37; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 2ல் ஒத்தமாந்துரையில் உள்ள, டீ கடை ஒன்றில் அமர்ந்திருந்தார். அப்போது, டீ கடைக்கு வந்த, சின்னதாராபுரம் வடக்கு குடித்தெருவை சேர்ந்த யேசுதாஸ், 34; கத்தியை காட்டி மிரட்டி, முருகானந்தத்திடம் இருந்து, 200 ரூபாயை பறித்து சென்றுள்ளார். முருகானந்தம் கொடுத்த புகாரின் படி, சின்னதாராபுரம் போலீசார், யேசுதாசை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us