/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் சாவு
/
வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் சாவு
ADDED : அக் 14, 2024 05:27 AM
கரூர்: கரூர் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்-துகளில், 3 பேர்
உயிரிழந்தனர்.
கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சபரீசன், 24; இவர் கடந்த, 11ல் கரூர் -திருச்சி சாலை திருமாநிலையூர் பகுதியில், 'ராயல் என்பீல்டு' புல்லட்டில் சென்று கொண்டி-ருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி-யதில், சபரீசன் உயிரிழந்தார். பசுபதிபாளையம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.* தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த சண்முகம் மகன் கணேசன், 23; இவர், நேற்று முன் தினம், நண்பர் தவமணி, 23, என்பவருடன், கரூர் - சேலம் சாலை தளவாப்பாளையம் பகு-தியில், 'ஹோண்டா யுனிகார்ன்' டூவீலரில் சென்று கொண்டி-ருந்தார். டூவீலரை தவமணி ஓட்டினார். அப்போது, திடீரென நிலை தடுமாறிய டூவீலர், தடுப்பு சுவரில் மோதியது. அதில், தலையில் அடிப்பட்ட கணேசன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தவமணிக்கு காயம் ஏற்பட்டது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் மாவட்டம், தெற்கு தளவாப்பாளைத்தை சேர்ந்த, மலை-யப்பசாமி மனைவி சுதாமணி, 40; இவர், நேற்று முன்தினம் ஸ்கூட்டி பெப் மொபட்டில், வெங்கமேடு - பழைய பரமத்தி வேலுார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேலுச்சாமி, 53, என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், சுதாமணி மீது மோதியது. அதில், சம்பவ இடத்தில் சுதாமணி உயிரிழந்தார்.
வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.