/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சரக்கு வாகனம் மோதி 3 பேர் படுகாயம்
/
சரக்கு வாகனம் மோதி 3 பேர் படுகாயம்
ADDED : நவ 22, 2025 01:59 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மேல குப்புரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 46; விவசாயி. இவருக்கு சொந்தமான, டி.வி.எஸ்., மொபட்டில், அதே ஊரை சேர்ந்த உறவினர் மருதை, 62, அவரது மனைவி பார்வதி, 55, ஆகிய மூவரும், கடந்த, 19 மதியம், அய்யர்மலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். திம்மம்பட்டி-அய்யர்மலை நெடுஞ்சாலையில், கணக்கபிள்ளையூர், கணபதி நகர் பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மொபட் மீது மோதியது.
இதில், தம்பதி உட்பட மூவரும் படுகாயமடைந்தனர். அவர்கள், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சுப்பிரமணியன் மனைவி முத்துலட்சுமி, 45, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், சரக்கு வாகன டிரைவர் பழனியப்பன் மீது வழக்குப்
பதிந்து விசாரிக்கின்றனர்.

