/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பறிமுதல் பணம் பதுக்கல் 3 போலீசாரிடம் விசாரணை
/
பறிமுதல் பணம் பதுக்கல் 3 போலீசாரிடம் விசாரணை
ADDED : பிப் 02, 2025 01:42 AM
கரூர்:கரூர் அருகே குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பதுக்கியதாக எழுந்த புகாரில், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் காரில் கடத்தி வருவதாக, கரூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
வெங்கமேடு அருகே சின்னகுளத்துப்பாளையத்தில், தனிப்படை எஸ்.ஐ., உதயகுமார், தான்தோன்றிமலை எஸ்.எஸ்.ஐ., செந்தில் குமார், வெங்கமேடு தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ரகுநாத் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வந்த ஒரு காரில், அரசால் தடை செய்யப்பட்ட, 1.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா இருந்தது தெரியவந்தது.
காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேவசர்சன், 40, சுரேஷ், 19, ஹரிராம், 27, ஆகிய மூன்று பேரை, வெங்கமேடு எஸ்.ஐ., சித்ராதேவி, கரூர் சிறையில் அடைத்தார்.
அவர்களிடம் இருந்த 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, போலீசார் பதுக்கி விட்டதாக புகார் எழுந்தது. வெங்கமேடு பொறுப்பு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், உதயகுமார், செந்தில்குமார் ஆகியோரிடம் திருச்சி டி.ஐ.ஜி., அலுவலகத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர்.