/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாரி கவிழ்ந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி
/
லாரி கவிழ்ந்து விபத்து 3 தொழிலாளர்கள் பலி
ADDED : நவ 02, 2025 02:26 AM
கரூர்: எம்.சாண்ட் லாரி சாலையோரம் கவிழ்ந்ததில், வடமாநில தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை கோடந்துார் பகுதியில், அரவிந்த் புளூ மெட்டல்ஸ் கல்குவாரியில் இருந்து நேற்று காலை லாரியில் எம். சாண்ட் ஏற்றி, திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைக்கு கொண்டு சென்றனர்.
லாரியை, கரூரை சேர்ந்த சந்திரகுமார், 40, ஓட்டினார். லாரியின் மேல் பகுதியில் எம்.சாண்ட் மீது ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த அஜய் பங்காரா, 30, சிக்கந்தர் கெர் கட்டா, 21, பீஹார் மாநிலத்தை சேர்ந்த வித்யானந்த் பிரபாகர், 48, ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
லாரியின் உள்ளே, ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த புல்ஜேம்ஸ் பர்வா, 31, அமர்ந்திருந்தார்.
லாரி, தென்னிலை அருகே முதலி கவுண்டன்புதுார் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
அப்போது, லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த அஜய் பங்காரா, சிக்கந்தர் கெர்கட்டா, வித்யானந்த் பிரபாகர் ஆகியோர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது எம்.சாண்ட் கொட்டியது.
அதில் சிக்கிய மூன்று பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
சந்திரகுமார், புல்ஜேம்ஸ் பர்வா காயம்அடைந்தனர். இருவரும், கரூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.

