/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
/
லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
ADDED : பிப் 10, 2024 01:52 AM
கரூர்:லஞ்சம் பெற்ற வழக்கில், வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளருக்கு, சிறை தண்டனை விதித்து கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை, பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 50, 2016ல் பட்டா பெயர் மாற்றம் செய்ய, காதப்பாறை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு வி.ஏ.ஓ., மாலதி, 46, லஞ்சமாக, 5,000 ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத செந்தில் குமார், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
பிறகு போலீசாரின் ஆலோசனைப்படி, மாலதியிடம் பணத்தை தந்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் முனியப்பன், 56, ஆகியோரை, கையும் களவுமாக கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில், கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் விசாரித்து, வி.ஏ.ஓ., மாலதிக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம், உதவியாளர் முனியப்பனுக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.