/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாடுகளை திருடி அடிமாட்டுக்கு விற்ற 3 வாலிபர்கள் கைது: சரக்கு ஆட்டோ பறிமுதல்
/
மாடுகளை திருடி அடிமாட்டுக்கு விற்ற 3 வாலிபர்கள் கைது: சரக்கு ஆட்டோ பறிமுதல்
மாடுகளை திருடி அடிமாட்டுக்கு விற்ற 3 வாலிபர்கள் கைது: சரக்கு ஆட்டோ பறிமுதல்
மாடுகளை திருடி அடிமாட்டுக்கு விற்ற 3 வாலிபர்கள் கைது: சரக்கு ஆட்டோ பறிமுதல்
ADDED : ஏப் 27, 2024 09:59 AM
திருச்செங்கோடு: இரவு நேரங்களில் மாடுகளை திருடி, அடிமாட்டு சந்தைக்கு வெளிமாநில தரகர்களிடம் விற்பனை செய்து வந்த, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
திருச்செங்கோடு, ஆண்டிபாளையம் பகுதியில் வீடுகளில் இருந்து மாடுகள் தொடர்ந்து திருட்டு போவதாக, திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில், ரூரல் போலீசார் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்து முற்பட்டனர். சரக்கு ஆட்டோவை  நிறுத்திய டிரைவர், போலீசாரை கண்டதும், இறங்கி தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், ஆண்டிபாளையத்தை சேர்ந்த கவினேஷ், 33, அவரது  நண்பர்கள் பழனிச்சாமி, 28, காந்தி, 31, ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கிராமப்புறங்களில் மாட்டு எரு வாங்குபவர்கள் போல் சென்று, கிராமங்களை நோட்டமிட்டு, இரவு நேரங்களில் மாடுகளை திருடி சரக்கு ஆட்டோவில் ஏற்றிச்சென்று, கேரள மாநிலத்தை சேர்ந்த அடிமாட்டு தரகர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
அதேபோல், நேற்று இரவு, திம்மராவுத்தம்பட்டி பகுதியில் ஜெயமணி என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகளை பிடித்து அடிமாட்டிற்கு விற்பனை செய்து வந்ததையும் ஒப்புக்கொண்டனர். மாடுகளை திருடி விற்பனை செய்த பணத்தை வைத்து, கவினேஷ், தனது சரக்கு ஆட்டோ கடனை அடைத்துள்ளதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் தீபா உத்தரவுப்படி, எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து, கவினேஷ், பழனிசாமி, காந்தி ஆகிய மூன்று பேரை கைது செய்ததுடன், மாடுகளை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

