/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான பல்வேறு போட்டி 3,037 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
மாநில அளவிலான பல்வேறு போட்டி 3,037 மாணவ, மாணவியர் பங்கேற்பு
மாநில அளவிலான பல்வேறு போட்டி 3,037 மாணவ, மாணவியர் பங்கேற்பு
மாநில அளவிலான பல்வேறு போட்டி 3,037 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : நவ 06, 2025 01:04 AM
கரூர், ;'' கரூரில் நடக்கும் மாநில அளவிலான ஜூடோ, கேரம், சைக்கிள் போட்டிகளில், 3,037 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கூறினார்.
கரூரில் பாரதியார் மற்றும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான ஜூடோ, கேரம், சைக்கிள் போட்டிகள் நேற்று துவங்கின. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில், சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதோடு மட்டுமின்றி, வெற்றி பெற்ற பின்பு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், துணை முதல்வர் உதயநிதி செயல்பட்டு வருகிறார்.
பள்ளி கல்வித்துறைக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு நிதி கொடுத்து, இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பெற்று வருகிறது. மாநில அளவில் நடக்கும் ஜூடோ, கேரம், சைக்கிள் போட்டிகள் வரும், 8 வரை நடக்கிறது. ஜூடோவில், 2,065 பேர், கேரம் போட்டியில், 714 பேர், சைக்கிள் போட்டியில், 258 பேர் என மொத்தம், 3,037 பேர் பங்கேற்கின்றனர்இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

