தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் 33 தானியங்கி மழைமானி

கரூர் மாவட்டத்தில் 33 தானியங்கி மழைமானி

கரூர் மாவட்டத்தில் 33 தானியங்கி மழைமானி


ADDED : பிப் 21, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:'மாவட்டத்தில், 33 தானியங்கி மழைமானி நிலையங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது' என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை கணக்கிடும் பொருட்டு, 33 புதிய தானியங்கி மழைமானி நிலையங்கள் நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் தாலுகாவில், 3 இடங்கள், அரவக்குறிச்சி தாலுகவில், 8 இடங்கள், மண்மங்கலம் தாலுகாவில், 3 இடங்கள், புகழூர் தாலுகாவில், 5 இடங்கள், குளித்தலை தாலுகவில், 5 இடங்கள், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், 5 இடங்கள், கடவூர் தாலுகாவில், 4 இடங்கள் என மொத்தம், 33 தானியங்கி மழைமானி நிலையங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாாக, கரூர் தாலுகாவில் உள்ள வெள்ளியணை வடக்கு கிராமத்தில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணி உடனடியாக துவங்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us