/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி 7 தாலுகாவில் பெறப்பட்ட 330 மனு

ADDED : மே 23, 2025 01:40 AM
கரூர்,
மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், 7 தாலுகாவில், 330 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஜமாபந்தி பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடக்கிறது. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள், பதிவேடுகளில் உள்ளதா என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்படுகின்றன. இங்கு, 34 மனுக்கள் வரப்பெற்றன.
இதுபோல அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. அதில், கரூரில், 27 மனு, அரவக்குறிச்சியில், 26, புகழூரில், 37, குளித்தலை, 87, கிருஷ்ணராயபுரம், 64, கடவூர் 55 என மாவட்டத்தில், 7 தாலுகாக்களில் 330 மனுக்கள் வந்தன.
நிகழ்ச்சியில் வேளாண்துறை இணை இயக்குனர் சிவானந்தம், நில அளவை பிரிவு உதவி இயக்குனர் முத்துச்செல்வி, புள்ளியியல் துறை உதவி இயக்குனர் மயில்சாமி, மண்மங்கலம் தாசில்தார் மோகன்ராஜ், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.