ADDED : மார் 17, 2026 04:57 AM

அ நிறம் | அளவு
குளித்தலை: கடந்த சில நாட்களாக மொபைல்போன் தொலைத்தவர்கள், பறி கொடுத்தவர்கள், குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுத்திருந்தனர்.
இந்நநிலையில், பொது மக்கள் கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் விசாரணை செய்தனர். அதன் அடிப்படையில் தொலைந்துபோன, 35 மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. குளித்-தலை
டி.எஸ்.பி., செந்தில்குமார் மெற்பார்வையில் குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பாதிக்கப்பட்ட மக்க-ளிடம் மொபைல்போன்களை ஒப்படைத்தனர்.
