/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
/
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
ADDED : ஜூன் 26, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் கடந்த, 24ம் தேதி அம்மா சாலை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சுற்றித்திரிந்த கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த வினோத்குமார், 25; பரணி பாண்டி, 19; உதயகுமார், 24; ஆத்துார் பிரிவை சேர்ந்த மோகன் ராஜ், 25; ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து இரண்டு அரிவாள், ஒரு பிச்சுவா கத்தி, சாதாரண கத்தி ஆகியவற்றை கரூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.