/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சரக்கு வாகனம் மீது கார் மோதி 4 பேர் படுகாயம்
/
சரக்கு வாகனம் மீது கார் மோதி 4 பேர் படுகாயம்
ADDED : செப் 05, 2025 01:32 AM
குளித்தலை குளித்தலை அடுத்த, கம்மநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மனைவி ஜெயலலிதா, 56, விவசாய கூலி தொழிலாளி. சொந்த வேலையாக, உறவினர்களுடன் சரக்கு ஆட்டோவில் பிச்சம்பட்டி நோக்கி சென்றனர்.
அப்போது. திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை சித்தலவாய், பிச்சம்பட்டி பிரிவு ரோடு அருகே கடக்கும் போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த ஷிப்ட் கார் அதி வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து மோதியது. இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மனோகரன், 55, புவனேஸ்வரி, 49, சுந்தரி, 46, சதீஷ்குமார், 26, ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனையில் அனுமதித்தனர்.. இது குறித்து ஜெயலலிதா கொடுத்த புகார்படி, கார் டிரைவர் மதுரையை சேர்ந்த ராம்கிஷோர் என்பவர் மீது, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.