/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 41 பேர் குண்டாசில் கைது: எஸ்.பி.,
/
கரூர் மாவட்டத்தில் 41 பேர் குண்டாசில் கைது: எஸ்.பி.,
கரூர் மாவட்டத்தில் 41 பேர் குண்டாசில் கைது: எஸ்.பி.,
கரூர் மாவட்டத்தில் 41 பேர் குண்டாசில் கைது: எஸ்.பி.,
ADDED : செப் 15, 2025 01:30 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில், 41 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என, எஸ்.பி., ஜோஸ் தங்கையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் கடந்த, 2024ல், 45 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடப்பாண்டில் இதுவரை, 41 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், 23 சட்டம்-ஒழுங்கு குற்றவாளிகள், 10 வழிப்பறி வழக்கு குற்றவாளிகள், இரண்டு போதை பொருட்கள் விற்பனை குற்றவாளிகள், மூன்று போக்சோ குற்றவாளிகள், மது கடத்தல், மணல் கடத்தல் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தலா ஒருவரும் அடங்குவர்.
நிதி நிறுவனம் என்ற பெயரில், முறையாக அனுமதி பெறாமல், ஏலச்சீட்டு நடத்தி பொது மக்களை ஏமாற்றுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.