/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலுக்கு 48 பூச்சொரிதல் ஊர்வலம்
/
மாரியம்மன் கோவிலுக்கு 48 பூச்சொரிதல் ஊர்வலம்
ADDED : மே 18, 2025 06:34 AM
கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலுக்கு, 48 பூச்சொரிதல் ஊர்வலம் வந்-தது.
கரூரில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் வைகாசி திரு-விழா கடந்த, 11ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, கரூர் நகரின் பல பகுதிகளில் இருந்து, 48 பூச்சொரிதல் ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதா-ளங்களுடன் கோவிலுக்கு புறப்பட்டது.
பிறகு, ஒவ்வொரு பகு-தியில் இருந்தும், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், கோவிலுக்கு பூச்சொரிதல் தேருடன் நடந்து கோவிலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 48 பூச்சொரிதல் ஊர்வலமும் கோவிலை வந்தடைந்தது. பூச்சொரிதல் ஊர்வலத்தையொட்டி, கரூர் நகரம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாது-காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.