தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உதவி இயக்குனர் 5 பேர் இடமாற்றம்

உதவி இயக்குனர் 5 பேர் இடமாற்றம்

உதவி இயக்குனர் 5 பேர் இடமாற்றம்


ADDED : அக் 08, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்,தமிழகத்தில், டவுன் பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர், 5 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி மதுரை மண்டலம் மணிகண்டன், உதகை மண்டலத்துக்கும், அங்கு பணியாற்றிய கணேசன், மதுரை மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மண்டலம், வில்லியம் யேசுதாஸ் மதுரை மண்டலத்துக்கும், அங்கு வேலை செய்த கிறிஸ்டோபர்தாஸ், திருநெல்வேலிக்கும், சேலம் மண்டலம் குருராஜன், காஞ்சிபுரம் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, டவுன் பஞ்சாயத்துகளின் இயக்குனர் பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார்.

3 பேருக்கு பதவி உயர்வு

அதேபோல் சிறப்பு நிலை செயல் அலுவலர்கள், 3 பேர், உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி தென்காசி, குற்றாலம் சுஷம்மா, நாகர்கோவில் மண்டல உதவி இயக்குனராகவும், ஆலங்குளம் பிரகந்தநாயகி, சென்னை டவுன் பஞ்சாயத்துகள் இயக்க, திட்ட பிரிவு உதவி இயக்குனராகவும்,

கோவை வெள்ளலுார் சுலைமான்சேட், சேலம் மண்டல உதவி இயக்குனராகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us