/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் கைது
/
கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் கைது
ADDED : ஆக 01, 2025 01:21 AM
கரூர், ஆணவ படுகொலைக்கு எதிராக, தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, ஐந்து பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா அருகில், தமிழர் எழுச்சி கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழன் தலைமை வகித்தார். நெல்லையில், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த, பட்டியலின வாலிபரான சென்னை ஐ.டி., ஊழியர் கவின் வெட்டி ஆணவ கொலை செய்யப்பட்டார். எனவே, உடனடியாக ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியில் ஈடுபட்ட ஐந்து பேரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.