ADDED : ஆக 03, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த மேல்நங்கவரம் மந்தைக்கு அருகே உள்ள வாய்க்கால் கரையில், பணம்
வைத்து சூதாடுவதாக நங்கவரம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, எஸ்.எஸ்.ஐ., மதியழகன் தலைமையில் போலீசார், நேற்று
முன்தினம் சுற்றி வளைத்தனர்.அப்போது பணம் வைத்து சூதாடியதாக
பிச்சை, 40, வேலுச்சாமி, 41, கண்ணன், 48, செல்வமணி, 34, அண்ணாதுரை,
44, ஆகிய ஐந்து பேரை பிடித்து, 1,000 ரூபாய் பறிமுதல் செய்து, ஐந்து
பேரையும் கைது செய்தனர்.
