/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பவானி அருகே மகனை கொன்ற தாய் உள்பட 5 பேர் கைது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் தீர்த்துக்கட்டினர்
/
பவானி அருகே மகனை கொன்ற தாய் உள்பட 5 பேர் கைது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் தீர்த்துக்கட்டினர்
பவானி அருகே மகனை கொன்ற தாய் உள்பட 5 பேர் கைது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் தீர்த்துக்கட்டினர்
பவானி அருகே மகனை கொன்ற தாய் உள்பட 5 பேர் கைது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் தீர்த்துக்கட்டினர்
ADDED : மார் 17, 2025 04:25 AM
பவானி, மார்ச் 17
பவானி அருகே குடிக்க பணம் கேட்டு, மிரட்டி ரகளை செய்த மகனை, உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்த, தாய் உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஜல்லிக்கல்மேடு பகுதியில் காவிரி ஆற்றில் கடந்த, 15ம் தேதி இரவு ஒரு ஆண் சடலம் மிதந்து வந்தது. பவானி போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். கொலை செய்து கல்லை கட்டி ஆற்றில் வீசியது தெரிந்தது. போலீசார் விசாரணையில் பவானியை அடுத்த தொட்டிபாளை-யத்தை சேர்ந்த மதியழகன், 30, என்பது தெரியவந்தது. மதியழ-கனின் மனைவி கீர்த்திகா, ஆறு மாதங்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு தனது கணவர், மாமியார், மாமனார், மதியழகனின் அண்ணன், தாய்மாமன் ஆகிய 5 பேர் தான் காரணம் என எழுதி வைத்திருந்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிந்த பவானி போலீசார், மதிய-ழகன் உள்பட ஐந்து பேரையும் கைது செய்தனர். இதில் அனை-வரும் ஜாமினில் வந்து, பவானி போலீஸ் ஸ்டேஷனில் கையெ-ழுத்து போட்டு வருவதும் தெரிய வந்தது. மதியழகனின் தாய் சுதா உள்ளிட்டோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் தனது தம்பி, மருமகளின் உறவினர்களுடன் சேர்ந்து, மகனை கொலை செய்து ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மதியழகனின் தாயான பவானி, தொட்டிபாளை-யத்தை சேர்ந்த சுதா, 54; இவரின் தம்பி முருகானந்தம், 28; மதிய-ழகன் நண்பரான ராணா நகரை சேர்ந்த கவுரிசங்கர், 24; கீர்த்தி-காவின் தம்பியான பவானி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த, யோகேஷ், 25; கீர்த்திகாவின் மாமா மகன் சக்திபாண்டி, 32, ஆகி-யோரை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மதியழகன் கடந்த சில நாட்களாக மது குடித்து விட்டு, வீட்டில் ரகளை செய்துள்ளார். மேலும் மது குடிக்க பணம் கேட்டு, தாய் மற்றும் வீட்டில் இருந்த-வர்களை கத்தியால் குத்தவும் முயன்றுள்ளார். அவர்கள் பலமுறை அறிவுரை கூறியும், மிரட்டுவதை நிறுத்தவில்லை. இதுகுறித்து மருமகள் கீர்த்திகாவின் குடும்பத்தினரை சந்தித்த சுதா, என் மகன் எங்களையும் கொலை செய்து விடுவான் போலிருக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் மதியழகனை கொலை செய்து விட, இரு-வரின் குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளனர். கடந்த, 10ம் தேதி இரவு குடிபோதையில் வந்த மதியழகனை ஐந்து பேரும், கத்-தியால் நெஞ்சை கிழித்து கொன்றுள்ளனர். அவரது உடலில் கல்லை கட்டி ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றில் பிணம் மிதந்-ததால், ஐந்து பேரும் சிக்கிவிட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர். ஐந்து பேரையும் கைது செய்த பவானி போலீசார், ஈரோடு ஜே.1., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் நேற்று அடைத்தனர்.