ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராணி, 38.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பால் சோதனையாளராக பணியில் இருந்து வருகிறார். கடந்த, 19 மாலை 4:30 மணியளவில் மேட்டுப்பட்டி பால் சொசைட்டியில், வேலை முடித்து விட்டு, மண் பாதையில் நடந்து சென்றார்.அப்போது, மொபட்டில் வந்த, 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இருவர், இளையராணியின் கழுத்தில் அணிந்து இருந்த, ஐந்து பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்று தப்பினர். இது குறித்து, இளையராணி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் அடையாளம் தெரியாத இருவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.