/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நடமாடும் மருத்துவ முகாமில் 5,625 பேருக்கு சிகிச்சை
/
நடமாடும் மருத்துவ முகாமில் 5,625 பேருக்கு சிகிச்சை
நடமாடும் மருத்துவ முகாமில் 5,625 பேருக்கு சிகிச்சை
நடமாடும் மருத்துவ முகாமில் 5,625 பேருக்கு சிகிச்சை
ADDED : ஆக 28, 2025 01:59 AM
கரூர், புகழூர் டி.என்.பி.எல்., நடமாடும் மருத்துவ முகாமில், 5,625 பேர் சிகிச்சை பெற்றனர்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது. தனியார் மருந்துவமனையுடன் இணைந்து, காகித ஆலையை சுற்றியுள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகழூர், திருக்காடுதுறை ஆகிய பஞ்சாயத்து கிராமங்கள் பயன்பெறும் வகையில், மருத்துவ முகாம்கள் நடக்கின்றன.
அதில், 50-வது கிராமமான பொன்னியாக்கவுண்டன்புதுாரில் மருத்துவ முகாம் நடந்தது. அங்கு, 922 பேருக்கு மருத்துவ ஆலோசனை, தேவைப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதுவரை மருத்துவ முகாம்கள் மூலம், 5,625 பேர் சிகிச்சையில் பயனடைந்துள்ளனர்.
இத்தகவல், டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

