/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கரூர் மாவட்டத்தில் 5,635 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'
/
'கரூர் மாவட்டத்தில் 5,635 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'
'கரூர் மாவட்டத்தில் 5,635 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'
'கரூர் மாவட்டத்தில் 5,635 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'
ADDED : ஜன 23, 2025 06:25 AM
கரூர்: - கரூர் மாவட்டத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம், 5,635 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்-பட்ட வாங்கல் குப்புச்சிப்பாளையம், மின்னாம்பள்ளி, பஞ்சமா-தேவி, சோமூர், காதப்பாறை, மண்மங்கலம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மனுக்களை பெற்ற பின் பேசியதாவது: கிராமப்புறங்களில் வசிக்கும், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக-ளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சிறிய அளவி-லான, 56 முகாம்களும், 8 மெகா முகாம்களும் என மொத்தம் 64 தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், 5,635 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, பேசினார். தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி) சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் கனிகைமாதாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

