/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'நேரு' என்ற வார்த்தையில் ஓவியம் 5ம் வகுப்பு சிறுமி உலக சாதனை
/
'நேரு' என்ற வார்த்தையில் ஓவியம் 5ம் வகுப்பு சிறுமி உலக சாதனை
'நேரு' என்ற வார்த்தையில் ஓவியம் 5ம் வகுப்பு சிறுமி உலக சாதனை
'நேரு' என்ற வார்த்தையில் ஓவியம் 5ம் வகுப்பு சிறுமி உலக சாதனை
ADDED : நவ 14, 2025 02:19 AM
கரூர், 'நேரு' என்ற வார்த்தையில் ஓவியம் வரைந்து, 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
கரூர் வாங்கப்பாளையம் முத்து நகரை சேர்த்த கார்த்திக், ஆனந்தி தம்பதியினரின மகள் பவித்ரா, 10. இவர், கரூர் அருகே பவித்திரத்தில் உள்ள ஸ்டார் மெட்ரிகுலேசன் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்தது வருகிறார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின், 136-வது பிறந்தநாளை முன்னிட்டு, இவர் வரைந்த ஓவியம் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், 4,545 முறை 'நேரு' என்ற வார்த்தையை பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளார். தினமும் இரவில் ஆறு மணி நேரம் என, ஆறு நாட்களில் ஓவியத்தை வரைந்துள்ளார்.
இந்த சாதனை டி.சி.பி., வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பவித்ரா தனது ஓவியத்தை, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தவுள்ளார். பின் உலக சாதனை படைத்த பவித்ரா கூறுகையில், ''குழந்தைகள் மொபைல் மற்றும் டிஜிட்டல் சாதனங்களில் நேரத்தை வீணாக்காமல், ஓவியம் வரைவது, புத்தகம் படிப்பது போன்ற பயனுள்ள செயல்களில் ஈடுபட வேண்டும்,'' என்றார்.

