/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திடீரென தீப்பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்
/
திடீரென தீப்பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்
திடீரென தீப்பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்
திடீரென தீப்பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்
ADDED : மே 16, 2025 01:42 AM
குளித்தலை, குளித்தலை, அரசு மருத்துவமனை அருகே, கார் தீப்பற்றி எரிந்ததால், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
குளித்தலை அடுத்த, சித்தலவாயை சேர்ந்தவர் கார் டிரைவர் திருப்பதி, 48. இவர் நேற்று தனது மாருதி சுசூகி எகோ காரில், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த ஐந்து பேருடன், தொட்டியத்தில் உள்ள உறவினரின் இல்ல சுப நிகழ்ச்சிக்கு, பொருட்கள் வாங்குவதற்காக நேற்று இரவு, 8:30 மணியளவில் குளித்தலைக்கு காரில் வந்தனர்.
பொருட்கள் வாங்கிய பின், தொட்டியம் செல்வதற்காக திருச்சி - கரூர் மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை அம்மா உணவகம் அருகே சென்றபோது, திடீரென காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது. உடனே சுதாரித்துக் கொண்டவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அனைவரையும் கீழே இறக்கி விட்டார். அவர்கள் கீழே இறங்கியதும், சிலிண்டர் பொருத்தப்பட்ட கார் தீப்பற்றி எரிய தொடங்கியது.
சில நிமிடங்களில், தீ மளமள வென பரவி கார் முழுவதும் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனை கட்டுமான பணிக்காக பயன்படுத்தும் தண்ணீரை பீய்ச்சி அடித்து, 20 நிமிடங்களில் போராடி தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக காரில் வந்த நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் திருச்சி - கரூர் மாநில நெடுஞ்சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குளித்தலை எஸ்.ஐ, சரவணகிரி விசாரணை நடத்தி வருகிறார்.