/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
62 விவசாயிகளுக்கு பயிர், கால்நடை வளர்ப்பு கடன் வழங்கல்
/
62 விவசாயிகளுக்கு பயிர், கால்நடை வளர்ப்பு கடன் வழங்கல்
62 விவசாயிகளுக்கு பயிர், கால்நடை வளர்ப்பு கடன் வழங்கல்
62 விவசாயிகளுக்கு பயிர், கால்நடை வளர்ப்பு கடன் வழங்கல்
ADDED : ஆக 22, 2024 01:47 AM
குளித்தலை, ஆக. 22-
குளித்தலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 62 விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் கால்நடை கடன், 62 லட்சத்து, 87 ஆயிரத்து, 360 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
குளித்தலை அடுத்த, கே.பேட்டையில் செயல்பட்டு வரும் திம்மாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நேற்று விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எம்.எல்.ஏ., மாணிக்கம், மாவட்ட பஞ், குழு துணைத் தலைவர் தேன்மொழிதியாகராஜன், ஆர்.டி.ஓ., தனலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர்கள் கரூர் ஆறுமுகம், குளித்தலை திருமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, கலெக்டர்
தங்கவேல் தலைமை வகித்து, 62 பேருக்கு பயிர் மற்றும் கால்நடை கடன் தொகைக்காக, 62 லட்சத்து, 87 ஆயிரத்து, 360 ரூபாய் காசோலையை வழங்கினார்.
தாசில்தார் சுரேஷ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தியாகராஜன், ஆர்.ஐ., ஸ்ரீவித்யா, கூட்டுறவு துறை சிறப்பு அதிகாரி மல்லிகா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள் கலந்து
கொண்டனர்.