/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தில் 6,699 பேருக்கு சிகிச்சை
/
இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தில் 6,699 பேருக்கு சிகிச்சை
இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தில் 6,699 பேருக்கு சிகிச்சை
இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தில் 6,699 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜன 05, 2025 01:46 AM
கரூர் :''கரூர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும், 48 திட்டங்களின் கீழ், 6,699 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் கூறினார்.
கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும், 48 திட்டங்களின் கீழ், சிகிச்சை பெற்று வருபவர்களை, நிறைந்தது மனம் என்ற நிகழ்ச்சியின் மூலம், மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும், 48 திட்டத்தை, 2021டிச., 18ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில், 1,400 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், ஒரு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மூன்று அரசு மருத்துவமனைகள் மற்றும் ஐந்து தனியார் மருத்துவமனைகள் என, ஒன்பது மருத்துவமனைகளில், இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும், 48 திட்டங்களில், 6,699 பேருக்கு, நான்கு கோடியே, 84 லட்சத்து, 61 ஆயிரத்து, 370 ரூபாய் மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் லோகநாயகி மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

