ADDED : மே 23, 2026 05:55 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில் இருந்து, ஏழு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு, தமிழகம் முழுவதும் காவல் துறையில், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த, 19ல் கரூர் மாவட்டத்தில் இருந்து, த.வெ.க., பிரசார கூட்ட வழக்கை விசாரித்த கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், புகார் அளித்த கரூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுக்கள் உள்பட, 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் ஏழு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், கரூர் மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கரூர் டவுன் மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, அரியலுார்-2 போலீஸ் ஸ்டேஷனுக்கும், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தாமரை செல்வி, கடலோர காவல் படைக்கும், பசுபதிபாளையம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் திருச்சி சிட்டிக்கும், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டர் டெனிசியா, திருச்சி பாய்லர் பிளான்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கும், மாயனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன், திருச்சி மாவட்டம் முசிறி-2 போலீஸ் ஸ்டேஷனுக்கும், குளித்தலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னாமராவதி ஸ்டேஷனுக்கும், கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம், குளித்தலை போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருச்சி லால்குடி மகளிர் இன்ஸ்பெக்டர் ரூபி, கரூர் சைபர் கிரைம் பிரிவுக்கும், திருச்சி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருச்சி சரக டி.ஐ.ஜி., அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் அம்சவேணி, மாயனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா, கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
